/* */

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.சார்பில் மனு

நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை கண்டித்து  பா.ஜ.க.சார்பில் மனு
X

நெல் கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தமிழக பா.ஜ.க. விவசாய அணி  சார்பில் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திலுள்ள பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில்லை, இடைத்தரகர் மூலம் முறைகேடு நடப்பதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி சார்பில் புகார்கள் கூறப்பட்டன.

இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை அருகே உள்ள நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய பிரிவு தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக விவசாய அணி மாநிலத் தலைவர் நாகராஜ், மாநில செயலாளர் ராஜேஷ் குருசாமி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய நகர, அணி, பிரிவு, மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கொள்முதல் நிலையத்தில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களிடம் தமிழக. பா.ஜ.க விவசாய அணி மாநில தலைவர் ஜி. கே. நாகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தார்.

Updated On: 25 May 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...