/* */

திருவண்ணாமலையில் தேசிய பெண்கள் தின விழா

திருவண்ணாமலையில் தேசிய பெண்கள் தின விழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேசிய பெண்கள் தின விழா
X

தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு அறிவு மகுடம் சூட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தேசிய பெண்கள் தின விழா மாவட்ட ஆட்சி தலைவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டத்தின் முக்கிய நோக்கம் கல்வி பங்கேற்பினை உறுதி செய்து அவர்களின் உரிமைகளை போற்றுவதாகும்.

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் நோக்கம் பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் பிறப்பினை உறுதி செய்து அவர்களின் கல்வித் திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதல், மேலும் இத்திட்டத்தின் எதிர்நோக்கும் முக்கிய சேவைகள் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணி புரிதல், கல்வித்துறை, காவல்துறை ,சமூக பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மருத்துவத் துறை திட்டம் குறித்து திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல், பிறப்புக்கு முன்பு பாலின் அடிப்படையில் கரு அழிக்கப்படுவதை தடுக்கும் விதமாக அனைத்து ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல்,

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகப்படுத்துதல் அவர்கள் உயர்நிலைக்கு மாறி செல்வதை உறுதி செய்தல், சுகாதாரம் ஊட்டச்சத்து கல்வி வன்முறை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் ஆகியவற்றில் வளர் இளம் பருவத்தினருக்கான உரிமைகளை மேம்படுத்துதல், குழந்தை திருமணம் நடைபெறா கிராமம் என உருவாக்க கிராமங்களை ஊக்குவித்து பெருமைப்படுத்துதல் போன்றவற்றினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என ஆட்சியர் விரிவாக பேசினார்.

இதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளின் நலனுக்காக சேவையாற்றி வரும் சாதனையாளர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது . பெண் குழந்தைகள் அனைவரும் சிலம்பம், மௌன மொழி, நாடகம், பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி எலிசபெத் ,பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கோமதி, சிலம்பம் ஆசிரியர் சூரிய பகவான், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2024 1:46 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு