/* */

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் பெளா்ணமியையொட்டி நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
X

ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்று இரவு பராசக்தி அம்மனின் பூப்பல்லக்கு விழா விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

குறிப்பாக சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப பௌர்ணமி ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் 15 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் நேற்று அதிகாலை 4:17 மணி முதல் 24 ஆம் தேதி இன்று அதிகாலை 5:47 மணி வரை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற நிலையில், சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.


இன்று அதிகாலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த பக்தர்களின் கூட்டம்.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.

அதைத்தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டதால், கோயில் வெளி பிரகாரத்தில் மாட வீதி வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

நேற்று காலை 11 மணிவரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்பிறகு, வெயில் சுட்டெரித்ததால், பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. பின்னர், நேற்று மாலை வெயில் தணிந்ததும் மீண்டும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இரவு முழுவதும் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் நீர்மோர், பானகம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செங்கம் ரோட்டில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

எப்பொழுதும் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அன்னதானம் வழங்குவது வழக்கம்தான். ஆனால் தற்போது திருவண்ணாமலையில் 105 டிகிரி அடிக்கும் வெயிலில் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில், உடம்பிற்கு எந்த விதமான கெடுதலும் ஏற்படாத வெயிலின் சூட்டை தணிக்கும் நீர் மோர், பானகம் வழங்கியதால் பக்தர்கள் ,முதியவர்கள், குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மகிழ்ச்சியுடன் பருகி சென்றனர்.

Updated On: 24 April 2024 1:03 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...