/* */

நகராட்சி அலுவலர் குழு உறுப்பினர்களாக தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு

திருவண்ணாமலை நகராட்சி அலுவலர் குழு உறுப்பினர்களாக தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

நகராட்சி அலுவலர் குழு உறுப்பினர்களாக தி.மு.க.வினர் போட்டியின்றி தேர்வு
X

நியமனக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா சீனிவாசனுக்கு எ. வ. வே. கம்பன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

திருவண்ணாமலை நகராட்சியில் நேற்று நகராட்சி அலுவலர் குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது.

இதில் ஒப்பந்த குழு உறுப்பினராக இந்து புகழேந்தி, நியமன குழு உறுப்பினராக பிரியா சீனிவாசன், வரி விதிப்பு முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக ஜோதி, கோவிந்தராஜ், மற்றும் ஜமீலா பீவி , போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தக் குழுவின் தலைவராக நகரமன்றத் தலைவர் இருப்பார் . இதில் உறுப்பினராக நகராட்சி ஆணையாளர் மற்றும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் இருப்பர். இந்த குழுக்களின் ஆலோசனை மற்றும் அனுமதியின் பேரில் மட்டுமே அதன் நிகழ்வுகள் நடைபெறும்.

உதாரணமாக நகர மன்றத்தின் விடப்படும் காண்ட்ராக்ட்கள் இக்குழுவின் ஆலோசனை மற்றும் அனுமதிக்கு உட்பட்டதே, அதேபோல் நகராட்சி கடைகளுக்கு வாடகை குறைப்பது நிர்ணயம் பண்ணுவது போன்ற பணிகளையும் இந்தக் குழுவே மேற்கொள்ளும். எனவே இந்த குழுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது

திருவண்ணாமலை நகராட்சி நியமனக்குழு உறுப்பினர், ஒப்பந்தக்குழு உறுப்பினர், மற்றும் வரிவிதிப்பு மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர்களுகான மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன்வெற்றி சான்றிதழினை வழங்கியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் ,நகர் மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சீனிவாசன், குட்டிபுகழேந்தி, மாவட்டத் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் ,நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Updated On: 1 April 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...