/* */

நீர் மேலாண்மை, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விருது: மாவட்ட ஆட்சியா்

Water Management in Tamil-நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ், கூறினார்

HIGHLIGHTS

Water Management in Tamil
X

Water Management in Tamil

Water Management in Tamil-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை மூலம் ஏரி, குளங்கள், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறைதீா் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.

இதையடுத்துப் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசி முடிப்பதற்கே மதியம் 1 மணி ஆகி விடுகிறது. இதையடுத்து விவசாயிகளிடம் தனி நபர் கோரிக்கை மனுகள் பெறப்படுகிறது. இறுதியாக பெறப்படும் மனுக்கள் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

அதனால் வரும் கூட்டங்களில் பேசுவதை குறைத்து கொண்டு கோரிக்கை மனுக்களை முன்கூட்டியே பெற்று கொண்டால் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளை கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீர் மேலாண்மை, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விருதுகளை பெற்று வருகிறது. இதற்கு விவசாயிகளின் ஒத்துழைப்பே காரணம்.

நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் அகற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பருவ மழை வர உள்ளது. இதனால் அரசு அலுவலர்களுக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தாலும், கால்வாய்களை தூர்வாரி தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் கால்வாய் எங்கேயும் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், கால்வாய்கள் தூர்வரப்படாமல் இருந்தாலும் மனுவாக அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் தனி, தனியாக வந்து கலெக்டர் மற்றும் வேளாண்மை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட126 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் முருகேஷ் உத்தரவிட்டாா். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!