கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்

தங்க கொடி மரம் முன்பு அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்க, அண்ணாமலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கார்த்திகைத் தீபத் திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்
X

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் திருக்கோயில்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை மகாதீப திருவிழா, பக்தர்கள் இல்லாமல் எளிய முறையில் கொண்டாடப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அண்ணாமலையார் கோயில் தீபத்தை காண பல மாவட்டங்களில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் படையெடுத்து வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதலே கிரிவலம் தொடங்கிய பக்தர்கள் இன்று அதிகாலை பரணி தீபம் பார்ப்பதற்காக அண்ணாமலையார் கோயிலின் முன்பு குவிந்தனர்.

கோயிலை அலங்கரிக்கும் பணி

கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலை அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து மலர்கள் வரழைக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதி முன்பு 2-ம் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்கள், கரும்பு மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டன.

தங்க கொடி மரம் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்களில் வாழை மரம் மற்றும் தென்னங்கீற்று கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. மேலும் முகப்பு பகுதியில் சிவலிங்கம் மற்றும் 2 நந்திகளை தத்ரூபமாக வடிவமைத்து மலர்களைக் கொண்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது.


இதேபோல், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் மகா தீப தரிசன மண்டபமும் தென்னங்கீற்றுகளை கொண்டு பின்னப்பட்ட தட்டுகள் மற்றும் தோரணங்கள் மூலமாக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு உள்ள மண்டபமும் மலர்களால் அலங்கரித்து ரம்மியமாக காட்சி கொடுக்கிறது.அனைத்து சன்னதிகளும் வாழை மரங்கள், மலர்கள் மற்றும் தென்னங்கீற்றுகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிளிகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் முன்பு வாழைமரங்கள் மற்றும் தென்னங்கீற்றுகள் மற்றும் இளநீர் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிவலப்பாதை அடிக்கடி தூய்மை பணியாளர்களால் தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

2700 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 2700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன. சென்னை கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

குறிப்பாக விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகளும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பேருந்துகளும், புதுச்சேரி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பேருந்துகளும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பேருந்துகளும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலை சென்று மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக வரும் 7ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம், தாம்பரம், புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை 8ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா்த்திகை மாதப் பெளா்ணமி

காா்த்திகை மாதப் பெளா்ணமி புதன்கிழமை (டிச.7) காலை 8.35 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (டிச.8) காலை 9.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

Updated On: 5 Dec 2022 11:59 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...