/* */

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆட்சியர் உத்தரவு

Girivalam Route - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற ஆட்சியர் உத்தரவு
X

Girivalam Route -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். இங்குள்ள கிரிவலப்பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி உள்ளனர். மேலும் சிலர் நடைபாதையை பல்வேறு சொந்த பயன்பாட்டுக்காக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு உள்ளதாக புகார் இருந்தது.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு மாத பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர். திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.

கிரிவலப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடைபாதையில் கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தி உள்ளனர். மேலும், கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையினை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற நிகழ்வுகள் தற்போது அதிகரித்து வருகிறது.

எனவே ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறினால், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் இணைந்து எவ்வித முன்னறவிப்பும் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல்துறை வாயிலாக வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Aug 2022 10:56 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு