/* */

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்
X

மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவா் பாா்வதி சினுவாசன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் தலைவா் பாா்வதி சினுவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் அறவாழி வரவேற்றாா்.

அத்தியாவசியப் பணிகளை தேர்வு செய்து பணிப் பட்டியல்களை அங்கீகரிக்க மன்ற ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.

44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை மாமல்லபுரத்தில் நடத்திட உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சரவணன், ஆராஞ்சி ஆறுமுகம், சாந்தி கண்ணன், சத்யா வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 17 Aug 2022 8:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...