/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் விதைகள் கிடைகும் இடங்கள் : கலெக்டர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரக்கூடிய சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் விதைகள் கிடைக்க கூடிய இடங்கள் குறித்து கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் விதைகள் கிடைகும் இடங்கள் : கலெக்டர் அறிவிப்பு
X

நெல் விதைக்கான மாதிரி படம்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரக்கூடிய சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள் மற்றும் விதைகள் கிடைக்க கூடிய இடங்கள் குறித்து கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரக்கூடிய சம்பா பட்டத்திற்கு (செப்டம்பர் - அக்டோபர்) ஏற்ற நெல் ரகங்கள் கோ 56, கோ 52, டி.கே.எம். 15, ஏ.டி.டி. 51 ஆகும். இதில் கோ 56 நெல் ரகம் ஒரு ஹெக்டருக்கு 6 ஆயிரத்து 372 கிலோ தானிய மகசூல் தரவல்லது.

இது குலை நோய், பாக்டீரியா இலை கருகல், தூங்றோ மற்றும் நெல் மணிகள் நிறம் மாற்றம் ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது. மேலும் தண்டு துளைப்பான் மற்றும் ஆனைக்கொம்பன் போன்ற பூச்சிகளுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் உடையது.

அதேபோல் கோ 52 நெல் ரகம் ஒரு ஹெக்டருக்கு சாராசரியாக 6 ஆயிரத்து 191 கிலோ தானிய மகசூலும், அதிகபட்சமாக ஹெக்டருக்கு 10 ஆயிரத்து 416 கிலோ தானிய மகசூல் தரவல்லது.

இந்த ரகமானது புகையான் மற்றும் தத்துபூச்சிக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. மேலும் குலை நோய், இலையுறை அழுகல், பழுப்புபுள்ளி நோய் மற்றும் இலையுறை கருகல் நோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்புதிறன் கொண்டது. இந்த 2 ரகங்களின் விதைகள் கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக நெல் துறையில் நேரிலோ அல்லது 9443376334 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

டி.கே.எம். 15 என்ற நெல் ரகம் ஒரு ஹெக்டருக்கு மானாவாரியில் சராசரியாக 3 ஆயிரத்து 995 கிலோ தானிய மகசூலும், பகுதிபாசன முறையில் ஹெக்டருக்கு 4 ஆயிரத்து 217 கிலோ தானிய மகசூல் தரவல்லது. இந்த ரகமானது தண்டுத்துளைப்பான், இலைசுருட்டு புழு மற்றும் ஆனைக்கொம்பன் போன்ற பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புதிறன் உடையது.

இந்த ரகத்தின் விதைகள் திருவள்ளூர் மாவட்டம் திரூர் குப்பம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நேரிலோ அல்லது 9443566162, 8838686576 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பெற்றுகொள்ளலாம். அதேபோல் ஏ.டி.டி. 51 என்ற நெல் ரகம் ஒரு ஹெக்டருக்கு 6 ஆயிரத்து 500 கிலோ தானிய மகசூல் தரவல்லது. இது இலை சுருட்டுபுழு, தண்டு துளைப்பான் மற்றும் புகையான் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. மேலும் குலை நோய்க் எதிர்ப்பு திறன் கொண்டது.இலையுறை கருகல் மற்றும் பாக்டீரியா இலை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புதிறன் கொண்டது.

இந்த ரகத்தின் விதைகள் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலோ அல்லது 9344575375 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம். எனவே விவசாயிகள் மேற்கூறிய முகவரி அல்லது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி பயன்பெறலாம். என மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 July 2023 1:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...