/* */

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய பழவகைகள் பறிமுதல்

Erode news- ஈரோடு மாநகரில் 23 கிலோ அழுகிய பழவகைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய பழவகைகள் பறிமுதல்
X

Erode news- அழுகிய பழவகைகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேசவராஜ், செல்வன், அருண்குமார்.

Erode news, Erode news today- ஈரோடு மாநகரில் 23 கிலோ அழுகிய பழவகைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உத்தரவின் படி, ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழக் குடோன், மொத்த விற்பனை கடைகளில் செயற்கை முறையில் இரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன், மற்றும் அருண்குமார் ஆகியோர் தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது 23 கிலோ அழுகிய நிலையில் உள்ள பழவகைகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பழ வியாபாரிகளிடம் பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்து உண்பதே சிறந்தது எனவும், செயற்கை முறையில் இரசாயனம் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைப்பதால் அப்பழங்கள் சாப்பிடும் பொது மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் அறிவுறுத்தினர்.


இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கூறுகையில், இந்த ஆய்வானது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும். பழங்களை பழுக்க வைக்க இரசாயனம் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ன் படி சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மீதான புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் செய்யலாம் என்றார்.

Updated On: 10 May 2024 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு