/* */

போளூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

போளூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

போளூர் பேரூராட்சி மன்ற கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சாந்தி நடராஜன், செயல் அலுவலர் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தார் நிஷாக் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேரூராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்வது, கலைஞர் நகர் புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளான சாலை மேம்பாடு பக்க கால்வாய் அமைத்தல் சிறு பாலம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வது, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 56 லட்சம் மதிப்பீட்டில் திட்ட கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் ஈர கழிவுகள் செயலாக கட்டமைப்பு பணி உலர் கழிவுகள் செயலாக கட்டமைப்பு பணி மேற்கொள்வது, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 38 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்வது, கண்ணன் தெரு டைவர்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை பக்க கால்வாய் மற்றும் சிறு பாலம் அமைத்தல், பூங்காக்கள் மேம்பாடு பணிகள் மேற்கொள்வது, ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சிசி ரோடு பகுதியில் உள்ள மயானத்தில் நவீன எரிவாயு மின்தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பணி முடிவுற்றவுடன் தனியார் அறக்கட்டளை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிப்பு மேற்கொள்ள அனுமதி கோருவது, பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியை பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் அறியும் வகையில் நான்கு திசைகளிலும் எல்லை பலகைகள் அமைப்பது, அரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளை துப்புரவு பணி மேற்கொண்டு பராமரித்து வருவதைப் போல அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்வது, போளூரில் புதிதாக எழுவது லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 40 கடைகள் சிறிய அளவில் இருப்பதால் 40 கடைக்கு பதிலாக 20 கடைகள் கதவுடன் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசுக்கு கருத்துரு அனுப்புவது, பேரூராட்சி அலுவலகம் எதிரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ஒரு கோடி மதிப்பில் வார சந்தைக்காக 70 கடைகள் கட்டப்பட்டும் அது பயன்படுத்தாமல் உள்ளது. எனவே அந்த கட்டிடத்தை சமூக கூடமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2023 2:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்