/* */

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 15 நாட்கள் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 15 நாட்கள் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள, விளையாட்டு மைதானத்தில், வருகிற 29ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை 15 நாட்கள் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கால்பந்து, வில்வித்தை, தடகளம், வாள்சண்டை, இறகுபந்து, கையுந்துபந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு, அனுபவம் வாய்ந்து பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர் மற்றும் மாணவரல்லாத இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு, காலை 6 முதல் 8 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி நடத்தப்படும். பயிற்சிக்கான கட்டணம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.200 வீதம் ஆன்லைன் மூலமாக (Pos machine) மட்டுமே பெறப்படும். எக்காரணம் கொண்டும் ரொக்கமாகப் பெறப்படாது. மேலும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 7401703492 மற்றும் 85086 41786 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவரும் ஆதார் கார்டு நகல் சமர்பிக்க வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்குபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற உள்ள விளையாட்டுக்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.

Updated On: 27 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!