/* */

அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்: ஆட்சியர் உத்தரவு

கலசப்பாக்கம் மாணவர் விடுதியில் ஆட்சியர் முருகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்: ஆட்சியர் உத்தரவு
X

ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், அங்கு இருந்த மாணவிகளிடம் உரையாடினார்.

கலசப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்து அங்கு உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து சமையல் உணவுப் பொருட்கள் குறித்து மாணவ மாணவிகளிடம் கேட்டறிந்து உணவு பொருட்கள் இருப்பினை ஆய்வு செய்தார். மாணவர்களின் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவர்களின் வருகை பதிவேடு, புத்தகத்தை சரிபார்த்து மாணவர்கள் பதிவேட்டில் உள்ளவாறு தங்கியுள்ளார்களா என்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விடுதியின் வார்டன் ரவியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் அங்கு இருந்த மாணவிகளிடம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சிய தட்சிணாமூர்த்தி, தனி வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 15 July 2022 1:04 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!