Begin typing your search above and press return to search.
ஜவ்வாது மலையில் சுற்றுலா மாளிகை கட்ட இடம் தேர்வு : சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
ஜவ்வாது மலையில் சுற்றுலா மாளிகை கட்டவுள்ள இடத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS

ஜவ்வாது மலையில் சுற்றுலா மாளிகை கட்ட இடங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பார்வையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பசுமை நிறைந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள், அழகான ஊசி வளைவுகள், மலைப்பாதையில் பல மூலிகைகள் கொண்ட எழில்மிகு காடுகளைக் கொண்டது.
இந்த ஜவ்வாது மலையை சுற்றுலா தளமாக வேண்டுமென மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.ஜவ்வாது மலையில் சுற்றுலா மாளிகை கட்ட இடங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி, ஒன்றிய குழு செயலாளர் மற்றும். தாசில்தார் ரமேஷ் , கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.