/* */

பருவத மலையில் பக்தர் பாதுகாப்புக்காக நேர கட்டுப்பாடு அறிவிப்பு

பருவத மலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி, நேர கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பருவத மலையில் பக்தர் பாதுகாப்புக்காக நேர கட்டுப்பாடு அறிவிப்பு
X

பருவதமலை கடப்பாரை படிக்கட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுாகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4 ஆயிரத்து 560 அடி உயரத்தில் ஸ்ரீபிரம்பராம்பிக்கை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு பவுர்ணமி நாட்களிலும், பிறநாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. மலையில் ஏற ஏதுவாகப் பழங்கால முறைப்படி மலையில் துளை இட்டு கடப்பாரையை அதில் நுழைத்து மூலிகை ரசம் கொண்டு இறுக்கமாக்கி, எந்த நிலையிலும் வெளியே வந்துவிடாதபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வாலிபர்கள், கஞ்சாவை எடுத்துக்கொண்டு மலை மீது சென்று பயன்படுத்துவதாகவும் மற்றும் சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதன் அடிப்படையில் வனத்துறையினரும் கடலாடி காவல் துறையினரும், மலை மீது ஏறி செல்லும் பக்தர்களை பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற கடலாடி போலீசார் அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் கட்டாயமாக அடுத்த முறை வரும் போது, ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். மாலை 3 மணிக்கு பிறகு மலையேற செல்லும் பக்தர்களை பச்சையம்மன் கோவிலோடு தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் சுரேஷ் கூறியதாவது:

பருவதமலைக்கு செல்லும் பக்தர்கள் பத்திரமாக வரவேண்டும் என்பதற்காக நேர கட்டுப்பாடு மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளுடன் ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதாலும், கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதாலும் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை பக்தர்கள் மலை ஏறினால் மீண்டும் இறங்குவதற்கு நேரம் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் மழைக்காலம் என்பதால் பாறைகள் வழுக்கும்.

இந்த பிரச்சினைகளால் மலையேறும் பக்தர்களுக்கு ஏதேனும் விபரீதம் நடந்தால், உடனடியாக அவர்களை மீட்டுக் கொண்டு வர முடியாது. இந்த சிக்கல்கள் வேண்டாம் என்பதற்காகவும், மேலும் ஏற்கனவே உள்ள நேர கட்டுப்பாட்டு விதிகளை கொஞ்சம் தளர்வு செய்யப்பட்டு இருந்ததாலும் பக்தர்கள் நேரம் அறியாமல் மேலே சென்று வந்தனர். ஆனால் குறிப்பாக அரசு விதிகளுக்கு உட்பட்டு காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி உண்டு. இப்படி செல்லும் பக்தர்கள் இரவுக்குள் வந்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இனிவரும் பக்தர்கள் இந்த நேரத்தை கடைபிடித்து வர வேண்டும். இதுகுறித்த நோட்டீஸ் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

கடந்த 4 நாட்களாக மலையை சுற்றிலும் இரவு நேரத்தில் வனத்துறையினரும் கடலாடி காவல் துறையினரும் ரோந்து வந்து தற்போது மலை ஏறும் இடங்களில் கேமராக்கள் வைக்க சொல்லி, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யும் இடம் முதல் மலையேறும் வரை பக்தர்களை கண்காணிப்பதற்கு 8 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Updated On: 21 Nov 2022 12:55 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!