'சில்மிஷ' தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியல்: தலைமையாசிரியர் கைது

கலசப்பாக்கம் அரசு பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியலில் ஈடுபட்ததை தொடர்ந்து தலைமையாசிரியர் கைது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சில்மிஷ தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மறியல்: தலைமையாசிரியர் கைது
X

கைது செய்யப்பட்ட தலைமையாசிரியர் காளியப்பன்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமையாசிரியராக காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த காளியப்பன்(55) என்பவர் உள்ளார். சுமதி என்பவர் உதவி ஆசிரியராக உள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்று முதல் தலைமையாசிரியர் காளியப்பன், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், தலைமையாசிரியரை கண்டித்து பள்ளி எதிரே போளூர்-மேல்சோழங்குப்பம் சாலையில் மாணவர்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.தொடர்ந்து கலசபாக்கம் வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமையாசிரியர் காளியப்பனிடம், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் விசாரணை நடத்தினார்.

நேற்று மாலை வரை விசாரணை நீடித்த நிலையில், இன்று தலைமையாசிரியர் காளியப்பன் மீது குற்றம் உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து போளூர் கல்வி மாவட்ட அலுவலர் தயாளன் உத்தரவிட்டார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து தலைமையாசிரியர் காளியப்பனை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருட்செல்வத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக வேறு பள்ளியில் இருந்து ஆசிரியரை நியமித்து இன்று முதல் பள்ளி வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

Updated On: 9 Feb 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்