கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொட்டும் மழையில் செய்யாறு காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்
HIGHLIGHTS

புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொட்டும் மழையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்தவர் அசினா. இவரை துணை காவல் கண்காணிப்பாளர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
5 நாட்களாகியும் புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செய்யாறு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக மகளிர் அணியினர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று கொட்டும் மழையில் செய்யாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டடனர்.
மேலும் தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தினல் ஈடுபட்டனர்.
அப்போது பணியில் இருந்த ஆய்வாளர், புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.