செய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை

செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை
X

நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் 108 பசுக்கள் மற்றும் கன்றுகளுடன் கோ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி மூலவர் நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை், தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும், பல வண்ண மலர்களால் அலங்காரமும் செய்து நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும் எழுந்தருளினர்.

பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள யாக சாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி குபேர விசேஷ ஹோமம், லலிதா சகஸ்ர ஜப ஹோமம் மற்றும் சுமங்கலி பூஜை, பாலா பூஜை ஆகியவை நடைபெற்றது. இதனையடுத்து கன்றுகளுடன் கூடிய 108 பசுக்களுக்கு மாலை அணிவித்து மஞ்சள், குங்குமம் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் மயில் வாகனத்திலும் 108 பசுக்களை 3 முறை வலம் வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு தீவனம் மற்றும் பழங்களை வழங்கியும், பூஜை செய்தும் வணங்கினர்.

Updated On: 14 Feb 2022 1:13 PM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்