Begin typing your search above and press return to search.
தேமுதிகவிற்கு எதிர்காலம் தொடங்கிவிட்டது தொண்டர்கள் என மகிழ்ச்சி
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். தேமுதிகவுக்கு எதிர் காலம் தொடங்கி விட்டதாக தொண்டர்கள் மகிழ்ச்சி......
HIGHLIGHTS

தேமுதிக அதிமுக கூட்டணி குறித்து தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பு நிலவி வந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் தேமுதிக தொண்டர்கள் ஆரணி கூட்ரோடு, பேருந்து நிலையம், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
கட்சித் தலைமை சரியான நேரத்தில் சரியான முடிவை தற்போது எடுத்துள்ளதாகவும். தேமுதிகவுக்கு எதிர் காலம் தொடங்கி விட்டதாகவும் தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் செல்வதுரை, மாவட்ட அவைத்தலைவர் டி.பி. சரவணன், ஜவகர் எல்லப்பன், பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.