தொடக்கப்பள்ளி ஆசிரியர் நல வளர்ச்சி பேரவை அமைப்பின் தொடக்க விழா

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் நல வளர்ச்சி பேரவை அமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொடக்கப்பள்ளி ஆசிரியர் நல வளர்ச்சி பேரவை அமைப்பின் தொடக்க விழா
X

முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் ஆசிரியர் நல வளர்ச்சி பேரவை அமைப்பின் தொடக்க விழா, 2022- 2023 ஆம் ஆண்டில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, மற்றும் சாதனை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் வட்டார கல்வி அலுவலர் உதயகுமரன், வட்டார பல மைய மேற்பார்வையாளர் முருகன், கணேசர் குடும்பத் தலைவர் கஜேந்திரன் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

முன்னதாக மண்மலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் எட்வர்ட் தாஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன் . குமார் காணொளி மூலமாக பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டி பேசினார் .

அவர் பேசுகையில்; ஆசிரியர் பணி என்பது அறப்பணி, தன்னலமற்ற பணி, சீரிய பணி. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது மட்டுமல்ல, ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ – மாணவியர் இடையே எடுத்துச் செல்லும் பணி. இப்படி சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள் குன்றுகளைப் போல இருக்க வேண்டும். ஆசிரிய சமுதாயம் மாதா, பிதா குரு தெய்வத்தினை விட உயர்வானவர்கள். மேலும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமுதாயப் பணிகளை ஈடுபட்டு சேவையாற்ற வேண்டும் என்று பேசினார்

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழுப்புரம் தலைமையாசிரியர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சாதனை மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

கடந்த 2022 – 2023ஆண்டு தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர் விழாவில் தலைமை ஆசிரியர்கள் செல்வகுமாரி, ஜெயந்தி, லதா, ரேவதி ,சிவசங்கரி , பாரதி, ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், அப்துல் காதர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

தளவாநாயக்கன்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கொட்டாவூர் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Updated On: 19 March 2023 11:31 AM GMT

Related News

Latest News

 1. ஈரோடு
  பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
 2. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
 4. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
 5. திருப்பூர்
  திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
 6. தேனி
  சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
 7. குமாரபாளையம்
  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
 8. விழுப்புரம்
  இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்
 9. தேனி
  19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்சர் ஐ.டி. நிறுவனம்...
 10. தேனி
  ராகுல்காந்தி தகுதி நீக்கம்...உண்மையில் நடந்தது என்ன?