/* */

சேத்துப்பட்டு வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா

சேத்துப்பட்டு வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் பாரம்பரிய உணவு திருவிழா
X

கடைகளில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மேற்பார்வையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் சுகாதார தனி அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் ஊழியர்கள் ஆரணி நகரில் காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய, புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சுமார் 65 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபாரதம் வசூலித்தனர்.

பாரம்பரிய உணவு திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் கூட்டமைப்பு மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் இணைந்து பாரம்பரிய உணவுத் திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுகளை பார்வையிட்டு அதனை ருசித்து பார்த்தார். பின்னர் அவர் பேசியதாவது

நாம் விஞ்ஞான காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம் . பாரம்பரிய வாழ்க்கையை இழந்து விட்டோம் ,பாரம்பரிய உணவையும் மறந்து விட்டோம் . இப்போது எங்கு பார்த்தாலும் துரித உணவு கிடைக்கிறது. அவை நாவிற்கு ருசியாக இருந்தாலும் உடலுக்கு கேடு என்பது நமக்கு தெரிவதில்லை.

நமது முன்னோர்கள் சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு ,சோளம், கொள்ளு ,எள்ளு என எண்ணற்ற உணவு தானியங்களை பயிரிட்டு அவற்றை முறையாக பயன்படுத்தி உணவாக உட்கொண்டனர். அவர்கள் நோயற்ற வாழ்வும் வாழ்ந்தனர்.

வரும் சமுதாயம் உடல் நலத்தோடு வாழ அரசு இயற்கை விவசாய முறைகளை மீண்டும் பயிரிட வலியுறுத்துகிறது .

அதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நல திட்டங்களை சலுகைகளையும் வழங்கி வருகின்றார். இங்கு வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய உணவுகள் நாம் தினமும் பயன்படுத்த முடியுமா என்பது நமக்கு கேள்வி குறிதான், இருந்தாலும் நாம் நம் முன்னோர் வழியில் சென்று மீண்டும் ஆரோக்கிய வாழ்விற்கு செல்ல வேண்டும்

.இதற்கு மகளிர் குழுவினராகிய நீங்கள் கிராமங்கள் தோறும் இயற்கை விவசாயத்தையும் ,சிறு தானியங்களின் பயன்களையும் பற்றி எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் வட்டார இயக்க மேலாளர் மஞ்சுளா வரவேற்றார். ஒன்றிய குழு துணை தலைவர் முருகன் மற்றும் உள்ளாட்சித் துறை பிரதிநிதிகள், மகளிர் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள், வட்டார இயக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2023 8:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்