/* */

‘பிளாஸ்டிக் பை வேண்டாம் - மஞ்சள் பை போதும்’ ஆரணியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆரணி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

HIGHLIGHTS

‘பிளாஸ்டிக் பை வேண்டாம் -  மஞ்சள் பை போதும்’ ஆரணியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

ஆரணி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது

ஆரணி நகராட்சியில் பழைய பஸ் நிலையம், புதிய நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது. நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் வழங்கினார்.

ஆரணி கடைவீதி, பஸ் நிலையம், ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நேற்று துண்டு பிரசுரங்களை நகராட்சி அதிகாரிகள் ,ஊழியர்கள் வழங்கினர். இதில் மேற்பார்வையாளர் குமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பாபுஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரணியில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாநில தலைவர் த.விஜயகீர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சா.அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் கு.அரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் பெருமாள், பொருளாளர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி வட்டார தலைவர் கோபி வரவேற்றார். அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியான மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, ஆரணி-வேலூர் நெடுஞ்சாலை வழியாக ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக முடிந்தது.

பின்னர் ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் வாங்கும் கடனை 6 மாதம் என்பதனை ஒரு வருடமாக உடனடியாக நீட்டிப்பு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொடுக்கும் கடனை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் உயர்த்த வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் இல்லாத கிராமங்களுக்கு நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தை நிறுவ அரசு முன்வர வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 20 March 2023 1:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்