/* */

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க புறவழிச் சாலையை அமைக்க வேண்டும் என பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை
X

பெரியபாளையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் 12,000 த்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆரணி ஆற்றங்கரை ஒட்டி சுழம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆடி மாதம் தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெறும். இந்தக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமை பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை மொட்டை அடித்து அங்குள்ள பொங்கல் மண்டபத்தில் வாடை பொங்கலிட்டு ஆடு கோழி என பலியிட்டு அவை அம்மனுக்கு படைத்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து பெண்கள் சிறுவர்கள் வயதானவர்கள் என அனைவரும் உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கொண்டு கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வளம் வந்து, பின்னர் பொது தரிசனம், கட்டண தரிசனம் என க்யூ வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

மேலும் சமீபத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ரூ.159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்து.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.இந்த நிலையில் பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்து செல்லும் பெரியபாளையத்தில் சாலை சரியான முறையில் சாலை வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சென்னை திருப்பதி சாலை என்பதால் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.

இது மட்டுமல்லாது பெரியபாளையம் பஜார் பகுதி இருந்து கோவிலுக்கு செல்லும் வரை இரு புறங்களில் உள்ள சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் மற்றும் அவடியாக செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் புறவழிச் சாலை அமைக்க அரசு அனுமதித்து அப்பணிகளை நடைபெறாமல் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் கூறுகையில், புகழ்பெற்ற பவானி அம்மன் ஆலயத்திற்கு ஆடி மாதம் மட்டுமல்லாமல் தற்போது வெறும் நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதாகவும் விழா நாட்களிலும், முகூர்த்த நாட்களிலும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களாலும் மற்றும் அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மேலும் கனரக வாகனங்கள் ஊருக்குள் வருவதால் விபத்துகளும் ஏற்படுகிறது.

இதனால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக எனவே அரசு உடனடியாக மக்களின் நலனை கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்திட வேண்டும் எனவும், அதே போல் புறவழிச் சாலையை அமைத்து கனரக வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்காமல் புறவழிச் சாலை வழியாக திருப்பி விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 25 April 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...