/* */

பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Overhead Water Tank -தாமரைப்பாக்கத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
X

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி.

Overhead Water Tank -தாமரைப்பாக்கம் ஊராட்சி செங்குன்றம் செல்லும் சாலை அருகே பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சேதமடைந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொண்டு அதனை அகற்றி புதிய தொட்டியை தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 8,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் திருவள்ளூர் ஆவடி செங்குன்றம் பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சந்திப்பாக இருக்கின்ற தாமரைப்பாக்கத்தில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஊராட்சியின் பஜார் பகுதியில் தாமரைப்பாக்கம் அம்மணம்பாக்கம் தமிழ் காலனிக்கு செல்லும் சாலை அருகே உள்ள முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இக்குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டியில் இருந்து பஜார் மட்டும் அம்மணம் பாக்கம் தமிழ் காலனி பகுதிக்கு பைப்புகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இத்தொட்டியானது பழுதடைந்து மேற்கூரை கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும். தொட்டியை தாங்கி பிடிக்கும் 4 கான்கிரீட் தூண்கள் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும் அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலைக்கு மாறி உள்ளது.

இத்தொட்டிக்கு பின்புறம் தனியார் திருமண மண்டபம் அருகாமையில் கடைகள் உள்ளன. இப்பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும் எந்த நேரத்திலும் சரிந்து கீழே முறிந்து விழும் நிலையும் உருவாகி உள்ளது. ஆபத்து விளைவிக்கும் முன்பே பழுதடைந்த இந்த குடிநீர் தேக்க மேல்நிலைத் தொட்டியைஅகற்றி வேறு இடத்தில் புதிய தொட்டியை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொட்டியானது சரிந்து விழுந்தால் பெரிய அளவில் ஆபத்தும் சுமார் 2000 மக்கள் வசிக்கும் பஜார் மற்றும் தமிழ் காலனி பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் தெரிவித்தும் கிராம சபை கூட்டங்களிலும் எடுத்துக் கூறியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சாலை அருகே உள்ளதால் இந்த பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தொட்டியை கட்டி தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு