/* */

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்துவரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை

Pakistan Occupied Kashmir -பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன

HIGHLIGHTS

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  அதிகரித்துவரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை
X

பைல் படம்

Pakistan Occupied Kashmir -பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்து கொண்டு, இந்தியாவிற்குள் ஊறுடுறுவி பல்வேறு நாச வேலைகளை செய்து வருகின்றனர். சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையிலும், இந்த தலைவலி தீவிரவில்லை.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தீவிரவாத செயல்கள் குறைந்திருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் பாக்கிஸ்தான் பகுதியில் இருந்து போதை பொருட்களும், ஆயுதங்களும் இந்தியாவிற்குள் கடத்தப்பட்டன. இதனை பாதுகாப்பு படையின் கண்காணித்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வரும் பனிக்காலத்திற்கு முன்பே அங்கு பதுங்கி உள்ள தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

உலக நிதி நடவடிக்கை குழுவின் கண்காணிப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் சமீபத்தில் நீக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் தீவிரவாதிகளின் எண்ணிக் கையும், செயல்பாடுகளும் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அதிகம் ஊடுருவ வைக்க திட்டமிட்டு வருகின்றன. பனிப்பொழிவுக்கு முன்பாக 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் எல்லைக்கு அருகே மாற்றப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டியுள்ள வீடுகள் தீவிரவாத முகாம்களாக பயன்படுத்தப்படுகின்றன. இந்திய பகுதிக்குள் ஊடுருவ புதிய வழிகளை காணும் நடவடிக்கை களிலும் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் தீவிரமாக செயல்படுகின்றன. 20-க்கும் மேற்பட்ட முகாம்களில், தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யும் அளித்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீரின் எல்லையை ஒட்டியுள்ள மசில், கெரன் மற்றும் குரேஸ் ஆகிய பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்க ளுக்கு 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் வந்துள்ளனர். இதனால் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவு நிலவும் நேரத்திலும் எல்லையில் விழிப்புடன் ரோந்து பணி யை மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ஊறுவினால் அவர்களை சுட்டு வீழ்த்த இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடி க்கை அதிகரித்துள்ள நிலையில்,தீவிரவாதிகள் மொத்தமாக ஊடுறுவ முயன்றால், இந்திய ராணுவத்துடன் ஒரு மோதலை கூட உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரில் தீவிரவாதி களை வேட்டையாடுவது, தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் அரசின் அனுமதி எதையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை என ராணுவத்திற்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Nov 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு