/* */

பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்க அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை

Medicine For Snake Bite -பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்க அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பாம்பு கடிக்கு மருந்து இருப்பு வைக்க அரசுக்கு  பொது மக்கள் கோரிக்கை
X
பாம்பு கடித்த இறந்த ரமேஷ்.

Medicine For Snake Bite -திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை பாம்பு கடித்ததில் அண்ணன் உயிரிழந்தான். தம்பி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறான். உள்ளூர் மருத்துவமனைகளிலும் பாம்பு கடி மருந்து இல்லாததால் சிறுவன் பலியானதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினர்.

பெரியபாளையத்தை அடுத்த ஆரணி எஸ்.பி. கோவில் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான பாபு. இவருக்கு திருமணம் ஆகி மனைவி விஜயலட்சுமி மற்றும் ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற இரு மகன்கள் உண்டு. அங்குள்ள அரசுப் பள்ளியில் ரமேஷ் 9. வகுப்பும் சிகிச்சை பெற்று வரும் தேவராஜ் 8. வகுப்பு படித்து வந்தனர். கடந்த 4.ம்தேதி அன்று சிறுவர்கள் இருவரும் குடும்பத்துடன் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு ஒன்று உள்ளே நுழைந்து கடித்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் எழுந்து பார்த்தபோது அங்கு கட்டு விரியன் பாம்பு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து , பாம்பை அடித்து விட்டு சிறுவர்களை மீட்டு வெங்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அண்ணன் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பி தேவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இறந்து போன ரமேஷின் உடலை நேற்று 6.தேதி அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில் ஆரணியில் அரசு மருத்துவமனை இருந்தும் அங்கு பாம்பு கடிக்கு மருந்து இல்லாத காரணத்தினால் பெரியபாளையம் அடுத்த வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதலுதவி செய்து அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர் நீண்ட நேரம் ஆகிவிட்டதால் சிகிச்சை அளித்தும் சிறுவன் பரிதாபமாக இறந்து போனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருந்தும் பாம்பு கடித்து மருந்து இல்லாத காரணத்தினால் சிறுவன் பரிதாபமாக இறந்து போனதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடி மருந்து கட்டாயமாக இருப்பு வைத்து இதுபோன்று பாம்பு கடி சம்பவங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிறுவனை இழந்து அந்த கூலி தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றுஎன அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 7 Oct 2022 8:46 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...