/* */

தூத்துக்குடி மாவட்ட க்ரைம் செய்திகள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட க்ரைம் செய்திகள்..
X

தூத்துக்குடி மாவட்டத்தில் சில காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிளில் நிகழ்ந்த குற்றச் செய்திகள் குறித்த விவரங்கள் பற்றிய விவரம் வருமாறு:

60 கிராம் கஞ்சா பறிமுதல்:

ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீஸார் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கன்தட்டு - வீரமாணிக்கம் ரோடு பகுதியின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி முள்ளக்காடு சாமிநகர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 24) என்பதும் அவர் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீஸார் ஆறுமுகத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 60 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா வழக்கில் கைதான ஆறுமுகம் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்:

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியதாழை சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சூசை அடைக்கலம் (வயது 76). அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 52). இருவரும், கடந்த 5 ஆம் தேதி பெரியதாழை பேருந்து நிறுத்தம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனராம்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், சூசை அடைக்கலத்தை பீர் பாட்டிலால் தாக்கிய காந்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சூசை அடைக்கலம் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குரூஸ் மைக்கேல் வழக்குபதிவு செய்து காந்தியை கைது செய்தார்.

கொலை மிரட்டல் விடுத்தவர் கைது:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த கின்னர் ஜோன்ஸ் ராஜ் (37) என்பவருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஷாருக்கான் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று கின்னர் ஜோன்ஸ் ராஜ் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஷாருக்கான் திடீரென கின்னர் ஜோன்ஸ் ராஜியிடம் தகராறு செய்து அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து கின்னர் ஜோன்ஸ் ராஜ் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் வழக்குபதிவு செய்து ஷாருக்கானை கைது செய்தார்.

Updated On: 8 Dec 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்