இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: இன்ஜினியர் கைது
X

பைல்படம்

இராசிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஜினியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராசிபுரம் அடுத்த தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(27). பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் அவரது நண்பர் வீடு உள்ளது. நண்பரின் வீட்டுக்கு சென்றபோது, அவரது 16 வயது தங்கைக்கும் பாலகிருஷ்ணனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

நண்பரின் தங்கை அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பாலகிருஷ்ணன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவியின் பெற்றோர் இராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 26 Sep 2021 6:45 AM GMT

Related News