/* */

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழக அரசின் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழக அரசின் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் படிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒருமுறை ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகள் சிங்கிள் விண்டோ கவுன்சலிங் மூலம் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றவர்கள் நிதியுதவி பெற முடியாது. தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தலைவரின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். எற்கனவே கல்வி உதவி பெறும் விவசாயிகளின் வாரிசுகள், இறந்த அரசு பணியாளர்களின் வாரிசுகள், பணியிலிருக்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற இயலாது.

தகுதியான மாணவ மாணவிகள் உரிய ஆவணங்களில், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட்ட நகலுடன் மாவட்ட கலெக்டர் அல்லது தாங்கள் கல்வி படிக்கும் கல்லூரி முதல்வர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தமிழ்நாட்டில் வசிப்பவர் என்பதற்கான தாசில்தாரின் வசிப்பிடச்சான்று, குடும்ப தலைவரின் ஆண்டு வருமானச் சான்று, குடும்ப உறுப்பினர்களின் வயது, கல்வித்தகுதி வருமான விவரங்கள் அடங்கிய விவர பட்டியல், சிங்கிள் விண்டோ கவுன்சலிங் மூலம் சேர்க்கை பெற்றதற்கான உத்தரவு ஆகியவற்றின் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் அத்தாட்சி செய்யப்பட்டு இணைக்கப்பட வேண்டும். தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 May 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  5. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  6. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  7. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  8. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  10. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...