/* */

பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதிமுக பலவீனமடைந்துள்ளது: பாலகிருஷ்ணன்

Tamil Nadu BJP News - பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதால், அதிமுக பலவீனமடைந்துள்ளது என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

HIGHLIGHTS

பாஜகவின்  கட்டுப்பாட்டில் உள்ளதால் அதிமுக பலவீனமடைந்துள்ளது: பாலகிருஷ்ணன்
X

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடதுசாரி எழுத்தாளர்கள் சின்னப்பாரதி, பழனிச்சாமி ஆகியோரின் படங்களை சிபிஐ (எம்) மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

Tamil Nadu BJP News - இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட தலைவர் தேன்மொழி திருமண நிகழ்ச்சி நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார். பின்னர், நாமக்கல்லைச் சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர்கள் சின்னப்பாரதி. பழனிச்சாமி ஆகியோர்களின் பட திறப்பு விழாவில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆக. 20 முதல் 30 வரை அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு இறுதியாக செப்., 5ம் தேதி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. இது அதிமுகவை பலவீனம் அடைய செய்துள்ளது. பாஜக கொள்கைகளால், மேற்கு மாவட்டங்களில் ஜவுளி விசைத்தறி தொழில் முடங்கி உள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பருத்தியை பதுக்கி உள்ளதால் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நூல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிகப்படுத்தி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னர் மெத்தனம் காட்டியுள்ளார். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வேலைகளில் கவர்னர் ஈடுபட்டுள்ளார் என்றார். கம்யூனிஸ்ட் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 Aug 2022 10:10 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  2. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  3. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  6. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  7. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  9. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்