/* */

இன்று முதல் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்

குமாரபாளையத்தில் இன்று (பிப். 1ம் தேதி) முதல் விசைத்தறி வேலை நிறுத்தம் நடத்துவது என அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

HIGHLIGHTS

இன்று முதல்  விசைத்தறிகள் வேலை நிறுத்தம்
X

குமாரபாளையத்தில் நடந்த அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்குழு கூட்டத்தில், நிர்வாகி பாலசுப்ரமணி பேசினார்.

குமாரபாளையத்தில் இன்று (பிப். 1ம் தேதி) முதல் விசைத்தறிகள் வேலை நிறுத்தம் செய்வது என, அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

குமாரபாளையத்தில், அனைத்து தொழிற்சங்ககூட்டுக்குழு கூட்டம் சி.ஐ.டி.யு. விசைத்தறி தொழிற்சங்க அலுவலகத்தில் நிர்வாகி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூலி உயர்வு கோரி நடந்து வரும் விசைத்தறித் தொழிலாளர் போராட்டத்தை அனைவரும் அங்கீகரித்தனர். பிப். 1 முதல் கூலி உயர்வு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை நடத்துவது, இது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் முடிந்து தாசில்தாரிடம் மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் நஞ்சப்பன், சுப்பிரமணி, செல்வராஜ், அருள் ஆறுமுகம், சரவணன், புகழேந்தி, அசோகன், பாலுசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில், 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலூகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து, கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. இது குறித்து சங்கமேஸ்வரன் கூறியதாவது,

நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இதுகுறித்து, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம், என்று கூறி உள்ளோம், என்றார்.

தொழிசங்க நிர்வாகி சுப்பிரமணி கூறியதாவது,

ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழுக்கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இதில், எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இதுபற்றி பேசினோம். இரண்டாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்துள்ளார், என்றார்.

Updated On: 31 Jan 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்