நள்ளிரவில் பெய்த கனமழையால் நிரம்பியது குண்டேரிப்பள்ளம் அணை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நள்ளிரவில் பெய்த கனமழையால் நிரம்பியது குண்டேரிப்பள்ளம் அணை
X

குண்டேரிப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடிவாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைகிறது. இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரிப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.


இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குன்றி, கம்பனூர், விளாங்கோம்பை, கல்லூத்து ஆகிய பகுதிகளில் நள்ளிரவு 12 மணியளவில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணை நிரம்பி தண்ணீர் நிரம்பிய நிலையில் தற்போது கோடை காலத்தில் தண்ணீர் குறைந்து பள்ளங்களில் வரட்டு காணப்பட்ட நிலையில், நள்ளிரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக இன்று (புதன்கிழமை) காலை 6 மணி நிலவரப்படி 151 கன அடி தண்ணீர் குண்டேரிப்பள்ளம் அணைக்கு வந்தடைந்து அதன் முழு கொள்ளளவான (41.75 அடி) 42 அடியை எட்டி தண்ணீர் வெளியேறியது.


குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் மழையளவு 96.மி.மீட்டர் பதிவாகியுள்ள நிலையில், அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து 151 கன அடி நீரானது அப்படியே உபரிநீராக வெளியேறியது. இந்த உபரி நீரானது வினோபாநகர் வழியாக கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர் பகுதிகளில் உள்ள இரண்டு தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும், நேற்றிரவு குண்டேரிப்பள்ளம் அருகேயுள்ள வினோபாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அடித்த சூறாவளி காற்றால் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர்கள் சாய்ந்து சேதமாகிய நிலையில் காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 29 March 2023 12:01 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி
  2. கோவை மாநகர்
    கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளை
  3. கோவை மாநகர்
    கோவை குனியமுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் திறப்பு
  4. கோவை மாநகர்
    கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
  5. ஈரோடு
    ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
  6. கோவை மாநகர்
    கோவை ஜி.சி.டி.யில் படித்து 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த...
  7. இந்தியா
    150 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் ஆதாரங்கள்
  8. வேலூர்
    தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
  9. சேலம்
    முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
  10. டாக்டர் சார்
    does multani mitti remove acne முகப்பருவைப்போக்கி ஆரோக்ய சருமத்தைப் ...