Begin typing your search above and press return to search.
மசூதியில் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பு....
கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பள்ளி வாசல்களில் தொழுகை முடிந்து வெளியேறிய இஸ்லாமிய பெருமக்களிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
HIGHLIGHTS


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் 9வது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் இஸ்லாமியர்கள் கூடும் இடமான பள்ளிவாசல்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் முன்பு நின்ற வேட்பாளர் செங்கோட்டையன் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார்.
மேலும் இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார். இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.