/* */

சிறுகுறு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்: சிபிஎம்

சிறு குறு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென.சிபிஎம் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்

HIGHLIGHTS

சிறுகுறு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்: சிபிஎம்
X

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்‌ வாலிபர் பயிலரங்கில் பேசிய  பாலகிருஷ்ணன்

சி றுகுறு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிபிஎம் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்‌ வாலிபர் பயிலரங்கத்தை துவக்கிவைக்க வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழக அரசு முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது.குறிப்பாக இந்த பட ஜெட் கூட்டத்தொடரில் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்விடுத்துள்ளோம்.

அந்த வேண்டுகோளை அவர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டம் பயன்தராது என போராடிவருகின்றனர்.இந்த நிதிநிலை அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.அரசு பணி போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்குஓய்வுகால பலன்களை அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை டிஏ அரியர் வழங்கவில்லை, இவர்கள் ஓய்வுபெற்ற நிலையில் மிக மோசமான வாழ்வாதார நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கினறனர்.சிலர் இறந்து விட்டனர்.

எனவே ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பண பலன்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கவேண்டும். பெண்களுக்கு அறிவித்துள்ள உதவித்தொகை வழங்கும் அறிவிப்பை வெளியிடவேண்டும்.சிறுகுறு தொழில்கள் தமிழகத்தில் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறு குறு தொழில்களின் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் மூலப்பொருட்களை வாங்கி தொழில் நடத்த முடியவில்லை எனவே தமிழக அரசு மூலப்பொருட்களை வாங்கி தமிழக அரசு மானிய விலையில் வழங்கி சிறுகுறு தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஒன்றிய மோடி அரசு மாநில அரசுக்கு வழங்கவேண்டிய பணம் ஏறக்குறைய ரூ 27 ஆயிரம் கோடி வழங்க வேண்டியுள்ளது.இதனால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை இதனால் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய மோடி அரசு வழங்கவேண்டும்.

தருமபுரி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிப்காட் அமைப்பதற்காக நல்லவிளைநிலங்களையே கையகப்படுத்தியுள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படும் தரிசு,மேய்ச்சல்நிலம் ஆகிய நிலங்களை சிப்காட்டுக்கு கையகப்படுத்த வேண்டும் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

சாதிஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டுவந்துள்ளேன்.எனவே ஆணவக்கொலைகளை தடுக்கின்ற வகையில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டுஎன தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.மாநில அரசுடன்‌சேர்ந்து மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து மேகதாட் அனைகட்டகூடாது என்று ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் .

கர்நாடக அரசு இதற்கு நிதி ஒதுக்கியுள்ளது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேக்கேதாட்டு அனைகட்டுவது, ஹிஜாப் அணிய தடைவிதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது மேகதாட் அனை கட்டுவதை தடுக்க தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மேக்கேதாட்டு அனைகட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.திமுக ஆட்சிகாலத்தில் கூட்டுவங்கிகளில் வழங்கிய குறுகிய தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்‌ வாலிபர் பயிலரங்கத்தைகால கடனை மத்திய கால கடணாக மாற்றியுள்ளது இதுவும் பயிர்கடன் தான் இதனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் சுற்று சுழல் பாதிப்பின் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் உரக்கொள்கை காரணமாக பலமடங்கு உரம் விலை உயர்ந்துள்ளது.எனவே ஒன்றிய அரசை வற்புறுத்தி உரவிலை மானியத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.மானிய விலையில் உரம் கிடைப்பதின் மூலம் விவசாயம் பெருகும் இதற்கு தமிழக வேளான் பட்ஜெட்டில் ஆக்கபூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ரார் பாலகிருஷ்ணன்.

பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் குமார் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரேஜீஸ்குமார்,மாநில செயலாளர் பாலா மாநில துணைசெயலாளர் பால சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்