/* */

அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது.

HIGHLIGHTS

அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
X

ஒகேனக்கல் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பெய்துள்ளது. அதன் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால், கிருஷ்ணராஜ சாகர் அணையில், 10900 இருந்து கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 12000 ஆயிரம் கனஅடி தண்ணீர் என, மொத்தம் 22 ஆயிரத்து 900கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. எனவ்இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை வினாடிக்கு 10000கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை காவிரியின் நுழைவிடமான தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்