/* */

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறையா குருதி நோய்க்கு சிறப்பு சிகிச்சை

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறையா குருதி நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறையா குருதி நோய்க்கு சிறப்பு சிகிச்சை
X

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறையாகுருதி நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறையா குருதி நோய்க்கு(ஹூமோபிலியா) சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனித உடலில் ரத்தம் உறைய 12 வகை காரணிகள்(கிளாட்டிங் ஃபேக்டர்) தேவை. அவற்றுள் 8 மற்றும் 9 ஆகிய காரணிகள் குறைபாடு காரணமாக உறையா குருதி நோய் ஏற்படுகிறது. இந்த நோயுள்ள குழந்தைகளுக்கு இயல்பாகவே ரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. உடலில் அடிபடும்போது அல்லது காயம் ஏற்படும்போது உறைதலின்றி அதிகமாக ரத்தம் வெளியேறும் நிலை ஏற்படும்.

இந்நோய் பரம்பரை நோயாகக் கருதப்படுகிறது. 3-ல் இருவருக்கு இது மரபு வழி காரணத்தால் ஏற்படுகிறது. சிலருக்கு மரபணுக்களில் விளையும் திடீர் மாற்றங்களாலும் இந்நோய் அரிதாக ஏற்படலாம். குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்கும் இந்நோய் இல்லாவிட்டாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 17-ம் தேதி உலக உறையாக் குருதி நோய் விழிப்புணர்வு தினமாக(ஹூமோபிலியா) அனுசரிக்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது.

தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இதர வயதுப் பிரிவினர் 50 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இதுகுறித்து அவ்வப்போது தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள், 'இந்நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 80 சதவீதம் பேருக்கு கை, கால், மூட்டுகள், தசைகள் ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படலாம். அடிபடுவதன் மூலமோ, சில நேரங்களில் அடி எதுவும் படாமலும் கூட ரத்தக்கசிவு ஏற்படலாம்' என்றனர்.

மேலும், இவ்வாறான ரத்தக் கசிவு அறிகுறிகள் தென்பட்டால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் உறையாக் குருதி நோய் பிரிவின் மருத்துவரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் பாதிப்புள்ள குழந்தைகள் பெற்றோரின் மேற்பார்வையில் இதர குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட அனுமதிக்கலாம். அடிபடும் வாய்ப்புள்ள விளையாட்டுக்களான பனிச்சறுக்கு, கிரிக்கெட், உயரமான இடத்தில் இருந்து நீச்சலுக்காக குதித்தல் போன்ற விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

இந்நோய்க்கு தற்போதைய சூழலில் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளில் இந்நோய்கான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நல வாழ்வுக் குழுமம் மூலம் இதற்கான காரணி(கிளாட்டிங் ஃபேக்டர்) மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உறையாக் குருதி நோய் மையத்திற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகை தருகின்றனர்.

இம்மையத்தின் உதவியால் எங்கள் குழந்தைகளுக்கு பெங்களூரு, சென்னை, சேலம், வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை மாறி தருமபுரியிலேயே சிகிச்சை கிடைப்பது எங்களுக்கு பேருதவியாக உள்ளது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இப்பிரிவில் தினமும் 24 மணி நேரமும் உறையாக் குருதி நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 April 2022 4:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...