/* */

தொப்பூரில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதல்: டிஐஜி., எஸ்.பி., நேரில் ஆய்வு

தர்மபுரி அருகே தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிய விபத்தில் மீட்புப்பணிகளை சேலம் டி.ஐ.ஜி, எஸ்.பி.நேரில் பார்வையிட்டனர்.

HIGHLIGHTS

தொப்பூரில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதல்: டிஐஜி., எஸ்.பி., நேரில் ஆய்வு
X

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் போலீசர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவுக்கு உட்பட்ட எடமலைபுதூர் மற்றும் விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு செய்யும் பணியில் கடந்த ஒரு வாரமாக தர்மபுரி மாவட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் நேற்று இரவு தர்மபுரியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

அப்போது தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் தாண்டி செக்போஸ்ட் பகுதியில் சென்றபோது சாலையில் செப்டிக் டேங்க் லாரி பழுதாகி நின்றது. இதனை சரி செய்யும் பணியில் லாரியில் வந்த தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குஜராத்திலிருந்து அவிநாசிக்கு உருளைக்கிழங்கு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, நின்றுகொண்டிருந்த செப்டிக் டேங்க் லாரி மீது மோதி கவிழ்ந்தது.

இதேபோன்று கவிழ்ந்த உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி மீது கிருஷ்ணகிரியில் இருந்து பழனிக்கு நடுகற்கள் ஏற்றி சென்ற லாரி மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த லாரி மீது கன்டெய்னர் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர்கள் தொழிலாளர்கள் படுகாயமடைந்து அலறித் துடித்தனர். இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் செப்டிக் டேங்க் லாரியில் வந்த திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அடுத்த எடமலை புதூரை சேர்ந்த ரத்தினவேல் 30. என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோன்று உருளைக் கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த எட்டிமாங் குறிச்சி பகுதியைச் சேர்ந்த சித்தையன் வயது 49. என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு செய்யும் லாரியில் வந்த 11 பேரும்,நடுக்கற்கள் ஏற்றிய லாரியில் வந்த 3 பேர், படுகாயம் அடைந்தனர். உருளைக்கிழங்கு ஏற்றிவந்த லாரி டிரைவர் சேலம் மாவட்டம் வீராணம் தானனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பிரதாப் வயது 30, கால்கள் துண்டானது.

இந்த விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (32), மாரியப்பன் (28), திருச்சியைச் சேர்ந்த பாண்டியன்(30), பகவதி ராஜ்(34), மதன்குமார்(25), பிரகாஷ், மணிகண்டன்,மதன்குமார்,லாரண்ஸ், சங்கர், லூகாஸ் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அனுமந்தன்(43), ராமகிருஷ்ணன் (37), ரமேஷ் (43) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீஸார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி பணியாளர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்விபத்து தொடர்பாக தருமபுரி- சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்தது ஏற்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர் இன்று காலை அந்த லாரிகளை மீட்கும் பணியில் போலீசாரும் எல்என்டி பணியாளரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  2. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  6. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  7. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  8. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  9. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  10. செய்யாறு
    திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு