/* */

திருவண்ணாமலையில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் திருட்டு

Today Crime News in Tamil -திருவண்ணாமலையில் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள அங்காடியில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் திருட்டு
X

பைல் படம்.

Today Crime News in Tamil -திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலக வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது. திருவண்ணாமலையில் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.

இந்த அங்காடியில் காவலர்களுக்கு என விற்பனை செய்யப்படும் எல்இடி டிவிகள் , மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேமித்து வைக்கப்படும்.

இந்த பல்பொருள் அங்காடியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் பல்பொருள் அங்காடியை அங்கு பணிபுரியும் போலீசார் திறக்க சென்றனர். அப்போது அங்காடியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

அப்போது அங்காடியில் இருந்து விலை உயர்ந்த மூன்று எல்இடி டிவிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

சிசிடிவி கேமராக்களில் பதிவிடாத வண்ணம் கேமராக்களை திருப்பி வைக்கப்பட்டு முகம் தெரியாதவாறு மர்ம நபர்கள் கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர்.

பதிவாகும் கைரேகையை வைத்து யாரும் அடையாளம் கண்டு விடக்கூடாது எனக் கருதி அங்காடியின் உடைக்கப்பட்ட தாப்பாக்களையும் உடன் எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மதில் சுவரை தாண்டி உள்ளே வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தினர். அப்போது மோப்ப நாய் மதில் சுவர் வரை சென்று நின்றது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.25 கோடி மோசடி

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

செங்கம் அருகில் உள்ள பரமனந்தல், புதுப்பாளையம், குப்பநத்தம், புதுப்பட்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில், செங்கம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூ.500, ரூ.450 என தீபாவளி சீட்டும், ரூ.1,000 நகை சீட்டும் செங்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 2 பேரிடம் கட்டி வந்தோம். தீபாவளிக்கு முன்பு சீட்டு பணம் பிரித்த நாங்கள் அவர்களிடம் சீட்டு பணத்தை கேட்ட போது அடுத்த மாதம் தருவதாக தெரிவித்தனர்.

தீபாவளி முடிந்து ஒரு மாதமாகியும் அவர்கள் தீபாவளி சீட்டுக்கு உரிய மளிகை பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மோசடி செய்த சீட்டு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 25 லட்சம் இருக்கும். எனவே தலைமறைவாகியுள்ள அவர்களை கண்டுபிடித்து, தீபாவளி சீட்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 Nov 2022 6:32 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  4. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  5. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  6. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  7. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  9. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
  10. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக