/* */

ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

HIGHLIGHTS

ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
X

Erode news- ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஸ்வர்ண லிங்கத்துக்கும் பாலாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

Erode news, Erode news today- அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையம் என்ற பகுதியில் கால பைரவர் கோவில் உள்ளது. தென்னக காசி என்று அழைக்கப்படும் இந்த பைரவர் கோவிலில், 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட பைரவர் உருவ சிலை அமைந்துள்ளது. உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை இடம்பெற்றிருக்கும் இக்கோவிலின் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்கள் பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு.

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று இந்த கோவில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஸ்வர்ண லிங்கத்துக்கும் ஆன்மிக குரு விஜய் சுவாமி தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வர்ண பைரவருக்கும் ஸ்வர்ண லிங்கத்துக்கும் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர்.

பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமியில் பாலாபிஷேகம் செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். இடர் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Updated On: 2 May 2024 5:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  5. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  6. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  8. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  10. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை