/* */

இனாம் காரியந்தல் சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இனாம் காரியந்தல் சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம்
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனின் தலைமையில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகில் இனம்காரியந்தல் பகுதியில் சுங்கச்சாவடி கட்டப்பட்டு வாகனங்களுக்கு வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனை மீறி சுங்கச்சாவடியில் தற்போது வசூல் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரப் பகுதி ஒட்டியும் மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடியை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இனம்காரியந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அடுத்த 5வது கிலோ மீட்டர் தொலைவில் ஒன்றிய மத்திய அரசின் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சுங்கச்சாவடியை நோக்கி புறப்பட்டு (100 மீட்டர்) சென்றனர். அப்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

திருவண்ணாமலை இனாம் காரியந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி என்பது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், நான்கு வழி சாலைகளை அமைக்காமல் இருவழிச்சாலையாக இருக்கும் பொழுது சுங்கச்சாவடி அமைத்து மத்திய அரசு கொள்ளையடித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். நாடு முழுவமும் தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களை (சுங்கச்சாவடிகள்) உருவாக்கி, சாதாரண மக்களிடம் பிரதமர் மோடி அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது.

இந்தியா முழுவதும் வசூல் மையங்களை நடத்தி கொண்டும், இதற்காக ஒரு நிறுவனத்தை உருவாக்கியும் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நித்தின் கட்கரி செயல்படுத்தி வருகிறார்.

சுங்கச்சாவடியை எடுப்பதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லை என்றும், மாநில அரசு கூறுவதையும் மத்திய அரசு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது தொடர்பாக தம்மை போல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொழுது தமிழக அரசும், காவல் துறையும் தங்களை அடக்குவது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பினார்.

திருவண்ணாமலையை சுற்றி, 20 கி.மீ., தொலைவில் இருக்கும் மக்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது. இதற்காக பாஸ் வழங்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கில் குடிசை வீடு கட்டினால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றம் செய்து விடுகிறது. ஆனால் மத்திய நெடுஞ்சாலை துறையின் சார்பில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலகத்தை மாவட்ட நிர்வாகம் நீக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து ஆளுநர் செய்வது அராஜகமான செயல் என்றும் ஜனநாயகத்திற்கு விரோதம் என்றும் தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இதுவரை 44 பேர் உயிர் இழந்ததுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் இழந்துள்ளதை சுட்டிக்காட்டினார். பின்னர் அவர், சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என ஆட்சியர் முருகேஷை சந்தித்து வலியுறுத்தினார்.

Updated On: 9 March 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை