/* */

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமார், பொருளாளர் அன்பழகன், துணைத்தலைவர் சம்பத், ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட செயலாளர் சீத்தாராமன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி செயலாளர் சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தூய்மை பணியாளருக்கும் அரசாணைப்படி ஊதியம் நிர்ணயித்து இயக்குனரகத்தில் இருந்து தனி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தூய்மை பணியாளர் நலன்காக்க காலமுறை ஊதியக்கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கிட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட பொருளாளர்கள் ஏழுமலை, நாராயணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

Updated On: 28 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  3. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  5. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  7. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  8. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  9. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  10. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...