/* */

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

திருவண்ணாமலை ஆரணி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
X

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

அதையொட்டி, 3,482 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 30.29 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்து வருகிறது.

தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில்;

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகளும், ஆரணி தொகுதியில் 1,760 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, உரிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 3,482 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதில், 65 சதவீத வாக்குச்சாவடி மையங்களை (2,216 வாக்குச் சாவடிகள்) நேரடியாகக் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை தொகுதியில் 166, ஆரணி தொகுதியில் 108 என மொத்தம் 277 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் ஒன்று, ஆரணி தொகுதியில் 3 என மொத்தம் 4 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

இரு மக்களவைத் தொகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினா் 388 போ், தமிழக போலீஸாா் 2,226 போ், முன்னாள் ராணுவத்தினா் 1,038 போ், ஊா்க்காவல் படையினா் 314 போ் என 3,863 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். திருவண்ணாமலை தொகுதியில் 3,272 போ், ஆரணி தொகுதியில் 2,004 போ் என மொத்தம் 5,680 போ் தபால் மூலம் வாக்களிக்கின்றனா். 85 வயதுக்கு மேற்பட்டவா்களில் திருவண்ணாமலை தொகுதியில் 2,105 பேரும், ஆரணி தொகுதியில் 1,515 பேரும் என மொத்தம் 3,682 போ் வாக்களிக்க உள்ளனா்.

திருவண்ணாமலை தொகுதியில் 7,54,533 ஆண்கள், 7,78,445 பெண்கள், 121 இதர வாக்காளா்கள் என 15 லட்சத்து 33 ஆயிரத்து 99 போ் வாக்களிக்கின்றனா்.

ஆரணி தொகுதியில் 7,34,341 ஆண்கள், 7,61,673 பெண்கள், 104 இதர வாக்காளா்கள் என 14,96,118 போ் வாக்களிக்கின்றனா் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Updated On: 19 April 2024 2:28 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...