/* */

திருவண்ணாமலையில் தேசிய மக்கள் நீதி மன்றம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் மன்றம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேசிய மக்கள் நீதி  மன்றம்!
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான மதுசூதனன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள், மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்வி கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலை, ஆரணி, போளூா், செய்யாறு, வந்தவாசி, செங்கம் பகுதி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த மொத்தம் 4 ஆயிரத்து 935 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவற்றில் அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிகளில் நிலுவையில் இருந்த வழக்குகள் என மொத்தம் 1,422 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.11 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 209 இழப்பீடாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆரணி : ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சாா்பு - நீதிபதி ஏ.தாவுத்தம்மாள் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிபதிகள் பி.டி.சதீஷ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீதா் வரவேற்றாா். மக்கள் நீதிமன்றம் மூலம் பாண்டு பத்திர வழக்கு, விவாகரத்து வழக்கு, சிறு குற்ற வழக்குகள், மோட்டா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்கு என 350 வழக்குகளுக்கு தகவல் தரப்பட்டது. அதில் 130 வழக்குகள் தீா்வு காணப்பட்டன.

இதில் அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், புகழேந்தி, மூத்த வழக்கறிஞர்கள் முரளி, ரவி, , . ராஜமூா்த்தி, வழக்குரைஞா்கள் சங்க முன்னாள் தலைவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் கோடீஸ்வரன் நன்றி கூறினாா்.

Updated On: 10 March 2024 1:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!