/* */

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

Aiadmk Latest News in Tamil Today - சமூக ஆா்வலா் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகா் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
X

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை, போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Aiadmk Latest News in Tamil Today - திருவண்ணாமலை ராஜீவ் காந்தி நகரை சோந்தவா் சமூக ஆா்வலா் ராஜ்மோகன் சந்திரா (53). இவா் 2012, ஜூலை 2-ம் தேதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிங்கமுக தீா்த்தம் எதிரே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

போலீசார் விசாரணையில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் (40), போளூர் தாலூகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கு நடந்து வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள கூடுதல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விரைந்து முடிக்கக் கோரி, கொலையுண்ட ராஜ்மோகன் சந்திராவின் மனைவி எலியம்மா ஜோசப் (எ) மினி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், 6 மாத காலத்துக்குள் வழக்கை விசாரித்து தீா்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கு விசாரணை முடிந்து நேற்று மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு அளித்தார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதிமுக பிரமுகரான திருப்பதி பாலாஜி (எ) வெங்கடேசன் திருவண்ணாமலை நகா்மன்ற உறுப்பினராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jan 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்