/* */

கல்லூரி மாணவர் உயிரிழப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

கல்லூரி மாணவர் உயிரிழப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கல்லூரி மாணவர் உயிரிழப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
X

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ளும் போது தச்சூர் பழைய காலனி பகுதியைச் சேர்ந்த சேகர், ராஜேந்திரன், அண்ணாமலை ஆகியவர்களுக்கு சொந்தமான மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். அதிகாரிகளை கண்டதும் மாட்டு வண்டிகளை நடுரோட்டிலேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து மணல்கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளையும் தாசில்தார் ஜெகதீசன் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீ்ஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தலைமறைவான மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராய வியாபாரிகள் கைது

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி பகுதியில் சாராய வியாபாரம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அப்பகுதியில் சாராய தடுப்பு வேட்டை நடத்த உத்தரவிட்டார் அதன்படி கிராமிய போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மற்றும் தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

பீமாரபட்டி கிராமத்தில் அதே ஊரை சேர்ந்த பழனி (வயது 59) என்பவர் அங்குள்ள ஓடை ஒன்றில் சாராயம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே போல மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (52) என்பவர் ஆத்தனுர் ஓடை பகுதியில் சாராய வியாபாரம் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்

வெம்பாக்கம் வட்டம், அரசாணைபாளையம் கிராமத்தைச் சோந்த ராமதாஸ் மகன் நந்தகுமாா் (18). இவா் உத்திரமேரூரில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வந்தாா். மேலும், பகுதி நேரமாக லாரியில் உதவியாளராகவும் வேலை பாா்த்து வந்தாா்.

நந்தகுமாா் வழக்கம்போல அதே பகுதியில் உள்ள கல் குவாரிக்குச் சொந்தமான லாரியில் உதவியாளராக பணியில் இருந்தாா். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த நந்தகுமாரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, காஞ்சிபுரம் மருத்துவமனையில் சோத்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 16 Jan 2023 9:13 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?