/* */

வெயில் தாக்கம் அதிகம்: அருணாசலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

HIGHLIGHTS

வெயில் தாக்கம் அதிகம்: அருணாசலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்
X

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மோர் வழங்கப்பட்டது 

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் இலவசமாக வழங்கப்பட்டது.

பகல் வேளையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதனால் பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 10-ந் தேதி 94 டிகிரியும், 11-ந் தேதி 94.2 டிகிரியும், 12-ந் தேதி 94 டிகிரியும், இன்று 97 டிகிரியாகவும் பதிவாகியது.

வெயிலிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளுக்கு படையெடுக்கின்றனர். மேலும் தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மோர் வழங்கப்பட்டது.

Updated On: 13 March 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!