/* */

வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்; கலெக்டர் அதிரடி நடவடிக்கை

விடிய விடிய கிரிவலம், வெயிலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் போக்கும் வகையில் அதிரடியாக கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

HIGHLIGHTS

வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்; கலெக்டர் அதிரடி நடவடிக்கை
X

சுட்டெரிக்கும் வெயிலில் தேரடி வீதியில் காத்திருந்த பக்தர்களின் கூட்டம்

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம்

அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாளான நேற்று பங்குனி மாத பவுர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும்,உத்திர நட்சத்திரம் என்பதால் முருகன் சந்நிதியில் உள்ள மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பூத நாராயண பெருமாள் கோவில் அருகில் இருந்து துவங்கி தேரடி தெரு, வட தென் ஒத்தவாடை தெரு என சுமார் ஒரு கிலோமீட்டருக்கு மேல் காத்திருந்தனர்.

போகப் போக இந்த வரிசை நீண்டது. ராஜகோபுரத்தில் இருந்து பெரிய தெரு வரை சென்றது.

நேற்று திருவண்ணாமலையில் 100 டிகிரி வெயில் கொளுத்தியதால் ரோடில் காலனி அணியாமல் வெறும் காலோடு நின்றிருந்த பக்தர்கள் தவியாய் தவித்தனர் .உச்சி வெயிலில் சோர்ந்து போயினர்.

அப்போது ஒரு பக்தர் சோர்வடைந்து மயங்கி விழுந்ததால் உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் சிலர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.


அண்ணாமலையார் கோவில் கருவறை முன்பு வரிசையை சரி செய்த கலெக்டர் மற்றும் எஸ் பி

அதிரடி ஆக்க்ஷனில் இறங்கிய கலெக்டர்

பக்தர்கள் வெயிலில் காத்திருக்கும் தகவலை கேள்விப்பட்டவுடன் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ் பி கோவிலுக்குள் வந்தனர்.

பக்தர்கள் காத்திருந்து செல்லும் வரிசை முறைப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உடனடியாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மோர் வழங்க ஏற்பாடு செய்தார். கைக்குழந்தையுடன் காத்திருக்கும் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களை தனி வழியில் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்தார்.

தொடர்ந்து அண்ணாமலையார் கருவறைக்கு முன்பு செல்லும் பொழுது பக்தர்கள் குறுகலான பாதையில் செல்வதால் கருவறையின் முன்பு ஒரே நேரத்தில் ஆறு நபர்கள் மூன்று அடுக்கு நிலைகளில் தரிசனம் செய்யும் வகையில் பாதைகளை அகலப்படுத்தினார்.

குறிப்பாக கருவரை முன்பு ஒருவர் மட்டும் தரிசனம் செய்யும் இடத்தில் மூன்று பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையிலும், இரண்டு நபர்கள் தரிசனம் செய்யும் இடத்தில் ஆறு பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு கருவறையின் முன்பு வரிசை முறையை சரி செய்து அகலப்படுத்தினார்.

இதனால் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள் கொஞ்சம் வேகமாக முன்னேறி சென்று கொண்டிருந்தனர்.

பின்னர் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் பக்தர்களின் வரிசை சென்று கொண்டே இருந்ததால் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் அமைந்திருந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .வரிசையில் வரும் பக்தர்களுக்கு மோர் நீர் வழங்கப்பட்டது. ஆங்காங்கே வரிசையில் நீர் பிடித்துக் கொள்வதற்கு வசதியாக புதிய குடிநீர் தொட்டி சின்டெக்ஸ் டேங்க் வைக்கப்பட்டு குழாய் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவிக்கையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தினமும் அதிகமான பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு நீர் மோர் பிஸ்கட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய முன்னுரிமை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கருவறை முன்பு மூன்று அடுக்கு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய முடியும்.

அடுத்து வரும் சித்ரா பௌர்ணமிக்குள் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், கோவில் அறங்காவலர்கள் ,இணை ஆணையர் ஜோதி மற்றும் கோவில் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 25 March 2024 5:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  3. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  4. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  6. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  8. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  9. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...
  10. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?