/* */

மாநில செஸ் போட்டிக்கு தேர்வான மாணவா்களுக்கு பாராட்டு..!

மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாநில செஸ் போட்டிக்கு தேர்வான மாணவா்களுக்கு பாராட்டு..!
X

மாநில அளவில் செஸ் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிக்கு பாராட்டு தெரிவித்த கல்லூரி நிர்வாகத்தினர்

மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை கல்லூரி மாணவ, மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையிலான செஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது. திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் கலந்து கொண்ட பிசிஏ இரண்டாம் ஆண்டு மாணவா் எஸ்.சரண் வெற்றி பெற்று, திருவள்ளுவா் பல்கலைக்கழக ஆண்கள் செஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டாா்.

இவா், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 26 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கிறாா்.

இதேபோல, சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரியின் பிசிஏ முதலாம் ஆண்டு மாணவி எஸ்.துா்கா கலந்து கொண்டு போட்டியில் வென்று, பல்கலைக்கழக பெண்கள் செஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டாா்.

இவ்விருவரையும் கல்லூரித் தலைவா் பழனி, செயலா் விஜய் ஆனந்த், பொருளாளா் ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் உடையப்பன், முதல்வா் ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநா் கோபி, உடற்கல்வியாளா் சுகன்மாணிக்கராஜ் மற்றும் துறைத் தலைவா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

கல்லூரியில் பயிலரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ருக்மணி தலைமை வகித்தாா். செயலா் ரமணன் முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் ப்ரித்தி வரவேற்றாா்.

வணிக கணக்கியல் குறித்து சென்னை துவாரகதாஸ் கோவா்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை ஹேமமாலினி, எண்களின் சக்தி உள்ளிட்டவை குறித்து பட்டயக் கணக்காளா் ஹரிணி மாதவன் ஆகியோா் மாணவிகளுக்கு விளக்கிப் பேசினா்.

இதில், கல்லூரியின் வணிகவியல் துறை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை ரம்யா நன்றி கூறினாா்.

Updated On: 24 Jan 2024 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!