உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம்: அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்

Teacher Transfer - கலசபாக்கம் அருகே உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாற்றம்: அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்.

Teacher Transfer - திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பாபு என்பவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று மாலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் இப்பள்ளிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கல்வி அதிகாரிகள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் வந்த பின்னரே நாங்கள் பள்ளிக்குள் நுழைவோம் என்று பிடிவாதமாக மாணவர்கள் கூறினர். இதனையடுத்து அதிகாரிகள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் பாபுவை மீண்டும் சொரகுளத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வந்து சேருமாறு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பள்ளிக்கு வந்து சேர்ந்ததும் உற்சாகமடைந்த மாணவர்கள் அவரை தங்கள் தோள் மேல் தூக்கி சென்றனர். மேலும் மாணவர்கள் கண்ணீர் மல்க அவரை வரவேற்றனர். பின்னர் மாணவ-மாணவிகள் அனைவரும் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர். நீண்ட நேரமாக ஆவேசமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-07-30T15:07:02+05:30

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  4. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  5. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  6. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  7. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  8. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  9. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்