Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை: பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே பஸ்சில் இருந்து கால் தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெடுங்கல் கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர், செய்யாறு சிப்காட் தனியார் கம்பெனியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இன்று காலை ரவிச்சந்திரன் தொழிலாளர்களை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் அவர் கீழே இறங்கும் போது கால் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.